Monday, 24 October 2016

நவகிரக தோஷ பரிகாரம்

நவகிரக தோஷத்தால் ஏற்படும்  பாதிப்பு, அதற்கான பரிகாரம்:

சூரியன் தோஷம் & பாதிப்பு  விலக ...
உங்களுக்கு சூரிய பாதிப்பு இருப்பதால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படி அல்லது தசாபுக்திப்படி சூரியனோட அமைப்பு கெட்டிருப்பதால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.
சூரியதோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? உங்களுக்கு சூரியதோஷம்  இருப்பதால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.
சூரிய துதி
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
நாளும் நன்றே நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி
காலம் முழுவதும் அருள்வாய் போற்றி                                                                   சூரியன்

ஸ்தலம்: சூரியனார் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
மலர்: செந்தாமரை
உலோகம்: தாமிரம்
நாள்: ஞாயிறு
ராசிகற்கள்: மாணிக்கம்
பலன்கள்: காரிய சித்தி.
சூரியனார் கோவில் தொடர்பு எண்: 0435 -2472349.⁠⁠⁠⁠

[18:04, 10/24/2016] +91 81248 12470: சந்திரன் தோஷம் & பாதிப்பு விலக ...
உங்களுக்கு சந்திர பாதிப்பு  இருப்பதால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சந்திரன் மாத்ரு காரகன். அதாவது தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, தாயின் ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.
சந்திர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? ஜனனகால ஜாதக ரீதியாக, தசாபுக்திப்படி உங்களுக்கு சந்திரதோஷம் இருப்பதால்  திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அடிக்கடி பக்கத்தில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள். ஈயத்தினால் செய்யப்பட்ட காப்பு அல்லது டாலரை அணிந்து கொள்ளுங்கள். பசுமாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்து கொடுப்பதும் சிறப்பான பரிகாரமே. திங்களூர் கைலாசநாதர் ஆலயத்திற்குச் சென்று கைலாசநாதரையும், நவகிரக சந்திரனையும் வழிபட்டு வாருங்கள். இயன்ற அளவு பால், இனிப்புகளை பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள்.
உங்களால் முடிந்தால் மூன்ஸ்டோன் கணபதியை வாங்கிவைத்து வழிபடுங்கள். எப்போதும் சந்திரனை தலையில் சூடியிருக்கும் சிவனது துதிகளையும், சந்திர காயத்ரியையும் சொல்லுங்கள். இதில் உங்களால் இயன்ற பரிகாரத்தைச் செய்தாலே, சந்திரதோஷம் உங்களை சங்கடப்படுத்தாமல் ஓடும். பவுர்ணமி நாளில் சந்திர ஒளி படும்படி கிரிவலம் செல்லுங்கள். அன்றை தினம் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள அம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் என இயன்றதைச் செய்து வழிபடுவது சிறப்பான பலன் தரும். குறைந்தது 3 நெய் தீபங்களையாவது ஏற்றி வழிபட்டால் வாழ்க்கை பிறையாகக் குறையாமல் முழுநிலவாக ஒளிரும்.
தஞ்சாவூர் நாதன்கோயில் நந்திபுர விண்ணகரப் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் தரிசித்துவிட்டு, வெண்பொங்கல் பிரசாதம் விநியோகம் செய்துவிட்டு வருவது நல்லது. முத்து பதித்த டாலர் அல்லது முத்து மாலை அணிவது சந்திரதோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.                                    2.திங்கட்கிழமை தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்திற்கு சோமவார விரதம் என்று பெயர். ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் திங்கள் தோறும் விரதம் இருந்து, தோஷ நிவர்த்தி பெறலாம். சந்திர தசை நடக்கும் பத்து ஆண்டுகளும் இந்த சோமவார விரதம் அனுஷ்டிப்பது நல்ல பலனைத் தரும்.

3சிவ வழிபாடு மிகச் சிறப்புடையதாகும்.   திங்கட்கிழமையன்று தம்பதியருக்கு போஜனம் அளித்து இயன்றளவு தானம் செய்வது விசேஷம். நவக்கிரகத்தை வலம் வந்து, சந்திரனை தியானித்து பச்சரிசி தானம் செய்வது மேலும் விசேஷம்.

சந்திர துதி
அலைகடல் அதனினின்று மதியும் வந்து உதித்தபோது
கலை வளர் திங்களாகக் கடவுளர் எவருமேத்தும்
சிலைநுதல் உமையாள்பங்கன் செஞ்சடைபிறையாம் மேரு
மலை வலமாகவந்த மதியமே போற்றி! போற்றி!
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவரும் புரிவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடம் தீர்க்கும் சதுரா போற்றி
பிங்கலன் அணிந்த திங்களே போற்றி
எங்குலம் தழைத்திட எழுவாய் போற்றி
கங்குலில் ஒளியினைப் பொழிவாய் போற்றி
மங்களம் நிறைந்திட அருள்வாய் போற்றி                                                                                             சந்திரன்

ஸ்தலம்: திங்களூர்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
மலர்: வெள்ளரளி
உலோகம்: ஈயம்
நாள்: திங்கள்
ராசிகற்கள்: முத்து
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்                      
[18:05, 10/24/2016] +91 81248 12470: செவ்வாய்  பாதிப்பு விலக .....
உங்களுக்கு செவ்வாய்  பாதிப்பு இருப்பதால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். சிற்றின்பநாட்டம் அதிகரிக்கும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள் ஏதாவது ஒன்று மாறி மாறி கஷ்டப்படுத்தக்கூடும்.
செவ்வாய்  பாதிப்பு இருப்பதால்  உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க்கிழமைகளில் சூரியோதயத்தில் 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபத்தினை பசுநெய்விட்டு உங்கள் விட்டு பூஜையறையில் ஏற்றி வையுங்கள். செம்பு உலோகத்தாலான டாலர் அல்லது காப்பை அணிந்து கொள்வது நல்லது. முருகன் (அ) துர்கை டாலரானால் கூடுதல் சிறப்பு. அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபட்டும், அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபட்டு வாருங்கள். முடிந்தால் பழநிக்குச் சென்று அங்குள்ள முறைப்படி முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள். வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வதும் நல்ல பலன் தரும். ரெட்கார்னெட் டாலர் அணிவதும், ரெட்கார்னெட் கணபதியை பூஜிப்பதும் அவரவர் வசதிக்கு ஏற்ப செய்யலாம். வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கிக் கொடுங்கள்.
அடிக்கடி நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் பிறந்ததேதி அல்லது கிழமையில் செய்வது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். செவ்வாய் தோஷம் விலகி வாழ்க்கை செழிப்பாகும்.
செவ்வாய் துதி
சிறுப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை
புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.
செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி.
செவ்வாய்

ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்
நிறம்: சிவப்பு
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
மலர்: செண்பகம்
உலோகம்: செம்பு
நாள்: செவ்வாய்
ராசிகற்கள்: பவழம்
பலன்கள்: பகைவர்களை வெற்றி கொள்ளுதல், சகல சாஸ்திர ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 279423                                              
[18:06, 10/24/2016] +91 81248 12470: புதன்  பாதிப்பு விலக:
உங்களுக்கு புதன்  பாதிப்பு இருப்பதால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்குக் காரணமானவன். புதன் அமைப்புப் பாதகமாக இருந்தால் படிப்பு தடைபடுதல், பாட்டு, இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடைப்படுதல், உயர்வுகள் தடைப்பட்டு தாழ்நிலை ஏற்படுதல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அடிக்கடி விபத்து, உடல் சம்பந்தமான குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல் புத தோஷத்தால் ஏற்படும். புதன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? புதன் அமைதியான கிரகம், எனவே அமைதியாக, மென்மையாக இருக்கப் பழகுங்கள். பித்தளையால் செய்யப்பட்ட டாலர் அல்லது காப்பினை அணிந்து கொள்ளுங்கள். அடிக்கடி பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கி சாற்றி வழிபடுங்கள். பக்தர்களுக்கு பச்சைப்பருப்பு பாயாசம் அல்லது பால்பாயாசம் பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். புதன்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் ஏற்றி இஷ்ட தெய்வத்தைக் கும்பிடுங்கள். புதன் காயத்ரி, பெருமாள் காயத்ரி மனதாரக் கூறுங்கள்.
பச்சை கார்னெட் கல் டாலர் அல்லது கணபதியை பூஜை செய்யலாம். அடிக்கடி நவகிரக புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். முடிந்தால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடுவது நல்லது. நாகப்பட்டினம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள முறைப்படி வழிபட்டு வாருங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். புதன் தோஷம் விலகி உங்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்படும்.
புதன் துதி
இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்
புதபகவானே பொன்னடி போற்றி
பதம் தந்தருள்வாய் பண்ணொளியானே
உதவியே அருள்வாய் உத்தமா போற்றி
மதனநூல் முதலாய நான்கு மறை புகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்ஞைகள் அருள்வோன் திங்கள் சுதன் பல சுபாசுபங்கள் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.
புண்ணிய திருமக புதனே போற்றி
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி
திண்ணிய பயன்களை அருள்வாய் போற்றி.                                                              புதன்

ஸ்தலம்: திருவென்காடு
நிறம்: பச்சை
தானியம்: பச்சைபயிர்
வாகனம்: குதிரை
மலர்: வெண்காந்தல்
உலோகம்: பித்தளை
நாள்: புதன்
ராசிகற்கள்: மகரந்தம்
பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்
கோவில் தொடர்பு எண்: 04364 - 256424                      
[18:07, 10/24/2016] +91 89032 83829: தானத்தில் சிறந்தவர் கர்ணனே:  

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.

இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.

தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.

மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.

"கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று கூறினார்.

உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.
 மகிழ்ச்சியுடன்Gkraoவாழ்கவளமுடன்                      
[18:09, 10/24/2016] +91 81248 12470: குரு  பாதிப்பு விலக:
நமக்கு கிரகங்களினால்  பாதிப்பு ஏற்பட்டால் குருவிடம் (வியாழன்) போய் முறையிடுவோம். ஆனால் அந்த குருவே நமக்கு  பாதிப்பு அமைந்து விட்டால்.... அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. அதே சமயம் குரு என்ற முறையில் நமக்கு நல்ல பாடங்களையும் கற்று தருவார். வியாழன், புத்திரகாரகன். அதாவது குழந்தைகளின் ஆரோக்யம் சீர்கெடுவது, வாரிசுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, வாரிசுகள் உங்களைப் பிரிந்து போக நேரிடுவது இப்படிப்பட்ட பிரச்னைகள், வியாழ தோஷத்தால் ஏற்படலாம். ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மனஅழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு இரட்டிப்பாகும்.
வியாழன் தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? வியாழக்கிழமைகளில் சூரியோதயத்தில் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி தட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுங்கள். ஆலங்குடி, திருச்செந்தூர், மந்திராலயம், தூத்துக்குடி ஆழ்வார் திருநகரி ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் சென்று மனதார வழிபட்டு வாருங்கள். அந்தக் கோயிலுக்குப் போகும் முன் 40 லட்டுக்கும் குறையாமல் ஏழைகள் அல்லது பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள தட்சிணாமூர்த்தியை அடிக்கடி சென்று வழிபட்டு வாருங்கள்.
தங்கத்தாலான ஏதாவது ஒரு ஆபரணத்தை உடலில் அணிவது நல்லது. அவரவர் வசதியைப் பொறுத்து மஞ்சள் டோபாஸ் கல்லால் ஆன டாலர் அணிவது அல்லது கணபதியை பூஜிப்பது நன்மைதரும். யானையைப் பார்க்கும் போது அல்லது கோயில் யானைக்கு மஞ்சள் வாழைப்பழம் இயன்ற அளவு வாங்கிக் கொடுங்கள். குரு காயத்ரி, தட்சிணாமூர்த்தி துதிகளையும் எப்போதும் சொல்லுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். குருதோஷம் நிச்சயம் விலகி, குருவருள் பரிபூரணமாகக் கிட்டும்.
வியாழன் துதி
குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி                                                                ! குரு

ஸ்தலம்: ஆலங்குடி
நிறம்: மஞ்சள்
தானியம்: கொண்டை கடலை
வாகனம்: அன்னம்
மலர்: வெண்முல்லை
உலோகம்: பொன்
நாள்: வியாழன்
ராசிகற்கள்: புஷ்பராகம்
பலன்கள்: சகல சம்பந்துக்கள், மற்றும் வித்தைகள் தேர்ச்சி
கோவில் தொடர்பு எண்: 04374 -269407.

சுக்ர  பாதிப்பு விலக:
உங்களுக்கு சுக்ரன்,  பாதிப்பு இருப்பதால் என்ன பிரச்சனை வரும். அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம். சுக்ரன், களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால், குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால், புது வாகன யோகமோ அல்லது வாகன யோகத்தடையோ ஏற்படும்.
உடலில் முதுகுத்தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக்கல், பிரசவகால பிரச்னைகள், இப்படி ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன் வழி அல்லது மனைவி வழி உறவுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். சுக்ர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? வெள்ளிக்கிழமைகளில் சூரியோதயத்தில் உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். உங்கள் குலதெய்வத்தையோ அல்லது ஸ்ரீரங்கநாதரையோ வழிபடுவது சிறப்பு. பக்கத்து பெருமாள் கோயிலில் உள்ள தாயாரை தாமரை மலர் அல்து மல்லிகைப்பூ கொடுத்து வழிபடுங்கள். முயன்ற அளவு தானம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போது சுக்ர காயத்ரி, மகாலட்சுமி துதிகளை மனதார கூறுங்கள். பசுமாட்டிற்கு தயிர்சாதம் அல்லது பச்சரிசி, வெல்லம் கலந்து கொடுங்கள்.
வசதி உள்ளவர்கள் வைரம் அல்லது க்ரீன் கார்னெட் கல்லையோ அல்லது அக்கல்லாலான விநாயகரை வாங்கி பூஜியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்யுங்கள். உங்கள் வீட்டிற்கருகிலுள்ள நவகிரக சன்னதி சுக்ரனுக்கு இயன்ற அர்ச்சனை ஆராதனை செய்யுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சுக்ரதோஷம் நீங்கி வாழ்க்கையில் சுபயோக பலன்கள் கூடும்.
சுக்ர துதி
சுக்கிரமூர்த்தி சுபம்மிக ஈவாய்
வக்கிரம் இன்றி வரம் மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே!
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கு அருளே!
மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.
துணைநலம் அருளும் சுக்ரா போற்றி
மனையறம் தழைத்திட வருவாய் போற்றி
இணையிலா பொருளை கொடுப்பாய் போற்றி
வினையெலாம் விலகிட அருள்வாய் போற்றி.                                                 சுக்கிரன்

ஸ்தலம்: கஞ்சனூர்
நிறம்: வெள்ளை
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
மலர்: வெண்தாமரை
உலோகம்: வெள்ளி
நாள்: வெள்ளி
ராசிகற்கள்: வைரம்
பலன்கள்: விவாகம் மற்றும் பிராப்தம் செளபாக்கியம் மலட்டுத்தன்மை நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 0435 - 2473737⁠⁠⁠⁠

சனி பாதிப்பு விலக:
சனீஸ்வரன் வர்றான்...தொல்லை கொடுக்கப்போறான்... என சிவன் உட்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரன் தான். ஆனால் இவரைக்கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. இவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர். எனவே இவரை நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். . அதிலும் தலைமை நீதிபதி என்றால் கண கச்சிதாமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர் தான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் இவர் நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு இவருக்கு பிடிக்காத வார்த்தை. இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால்,(ஏழரை, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, மங்கு சனி) அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனம் உருகி வழிபாடு செய்தால், பாதிப்பை குறைப்பார். அத்துடன் அவரை விட்டு விலகும் போது நன்மைகள் பல செய்வார்.
சனி தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம் போன்ற உபாதைகள் ஏற்படலாம். சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்; தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது. தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம். இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது. வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.
சனி துதி
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவா
இச்செகம் வாழ இன்னருள் தா! தா!
முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமை அல்லால்வே றுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.
சகலரும் துதித்திடும் சனியே போற்றி
புகலரும் துயரம் துடைப்பாய் போற்றி
நிகரில்லாப் புகழினைத் தருவாய் போற்றி
செகமெலாம் நலம் பெற அருள்வாய் போற்றி!                                                          சனி

ஸ்தலம்: திருநள்ளாறு
நிறம்: கருப்பு
தானியம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
நாள்: சனி
ராசிகற்கள்: நீலம்
பலன்கள்: வியாதிகள், பயம், மற்றும் தீராத கடன்கள் நீங்கும்
கோவில் தொடர்பு எண்: 04368 - 236530

Wednesday, 3 August 2016

பிறந்த நட்சத்திர பொதுகுணம்

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்

அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.

மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

Sunday, 17 July 2016

Horoscope prediction


[05:51, 7/17/2016] +91 93818 46104: Send your name, parent's name, date of birth with time and  place
For more details refer this site

www.agathiyarjanachithar.in

Your horoscope prediction will send to you via WhatsApp or you can call to us.
Per horoscope prediction u have to credit amount ₹ .1'000. To the bank given below
Choose a bank which is easier to you


Name : T.K.JANARTHANAN IYER
Bank name :
Indian Overseas Bank
Account No : 133901000027554
IFSC : IOBA0001339
Name :T.K.JANARTHANAN IYER
36, CMR road, madurai - 9.



NAME:T.K.JANARTHANAN IYER
BANK : HDFC BANK
ACCOUNT NUMBER: 50100006155555
IFSC: HDFC0001277
 MADURAI.
TAMIL NADU
INDIA
www.agathiyarjanachithar.in


Name : T.J.YOGESWARI
Bank name : icici bank
Account No : 601101505692
IFSC : ICIC0006011


Name : T.J.YOGESWARI
Bank name : State bank of India
Account number: 30412296928
IFSC : SBIN0000988

And u can also easily pay that via payment gateway

agathiyarjanachithar.in/ordernow.htm

Kindly inform us after the payment done

Thursday, 14 July 2016

கணநாதர் உபாசனா

கணநாதர் உபாசனா விதி

பிராதக்காலத்தி லெழுந்திருந்து ஸ்நானபானஞ் செய்து
பட்டு வஸ்திரம் அல்லது
நார்மடி அரையில்டுத்தி
விபூதி யணிந்து அனுஷ்டான முதலியதை முடித்து பரிசுத்தமான விடத்தில்
தன்னந்தனியனாய்
வீற்றிறுந்து யாதொரு
சிந்தனாவஸ்தையுமின்றி அடியிற் கூறியவாரு
தியானஞ்செய்து சக்ரமெழுதி பூஜையில்
வைத்து தூபதீபங் கொடுத்து மூல மந்திரத்தை  ஜெபிக்கவும்.



விக்னேஸ்வரர் மந்திரம்
ஓங் றீங் அங் உங் சிங்
கணதேவாய நம,சகல
துரிதபூத வாதைகளும் 
நசிமசி 11 நாள் உரு 
1008- ஜெபிக்கவும்
சித்தியாம்.
ஓரு வெற்றுலையில் 
அல்லது உன்ளங்கையில் விபூதி
பரப்பி  அதில் இச்சக்கரத்தை ஐங்கோணமாய்க் கீறி
அதிற் பீஜாசட்ரங்களை
வரைந்து அதைச் 
சுற்றிலும் ஓங்காரத்தைப் போட்டு
மூலமந்திரஞ் செபிக்க 
சகல காரியங்களுஞ் 
ஜெயமாம். பல நோய்களும் அகலும்.

பூஜை விவரம்
செம்பு அல்லது மண்
கலத்தில் சுத்தமான ஜலம் சுத்தியாய் மொண்டுவந்து அதில்
மாவிலைக்கொத்து
போட்டு கும்ப வஸ்திரங்கட்டி மஞ்சள் 
குங்குமம் அட்சதை புஷ்பஞ் சாத்தி அதன்முன் வாழையில் 
போட்டு அதில் தாம்பூல
பழம் தேங்காய் புஷ்பம் 
சந்தனம் பரமான்னம்
வைத்து சூடஞ் சாம்பிராணி முதலிய 
தூபதீபங்கொடுத்து 
செய்ய வேண்டியது.
கணபதி மூல மந்திரம்

ஓம் நமோ பகவதே
ஐயும் கிலியும் சவ்வும்
கணபதி வசி வசி சுவாகாவென்று உரு
1008-ஜெபிக்கவும்
சித்தியாம்.

இதன் பலன்
குழந்தைகளுக்கும
பெரியவர்களுக்கும்
சேர்ந்த பயம்,காத்து,
சோகம்,மந்தம்
முதலியவைகளால்
உணடாகும் சுரம் பல தோஷங்கள் 
சிரசிலுண்டாகும்
செவ்வாப்பு கட்டிகள்
தெற்கத்தி நோய்,இழுப்பு வலிப்பு
முதலியவைகளுக்கு
மேற்படி கணேசரைப்
பூஜை செய்து 108
உருவரையில் ஜெபித்து  கும்ப தீர்த்தம் மூன்று
தரம் கொஞ்சம் அருந்தக் கொடுத்து விபூதி பூசிக்கொண்டுவரவும்
சகல வினைகளும் பற்றந்து சௌக்கியப்படும்.

Wednesday, 13 July 2016

ஏகாதசி விரதபலன்கள்

ஏகாதசி விரதபலன்கள்
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. சரியான முதலீடாக தேர்ந்தெடுத்தால் பயன்பல மடங்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தானே நாம். எனவே ஏகாதசி விரதத்தில் முதலீடுசெய்வோம்.

* மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி"" எனப்படும். பகையை வெல்ல உதவும்.

* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா"" எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.

* தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா"" எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா"" எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.

* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா"" எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.

மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா"" என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா"" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.

* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ"" எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.

* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா"" எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும்.

* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா"" எனப்படும் பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.

* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ"" எனப்படும். உடல் சோர்வு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.

* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ"" எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

* ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா"" என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும். எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம்.

* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா"" எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.

* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி"" எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும். ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி"" என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா"" என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.

* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா"" எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.

* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா"" எனப்படும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.

* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா"" என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று பல்லாண்டுஅரசு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).

* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா"" எனப்படும் வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

* ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா"" எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.

* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ"" என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா"" என்பர். இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.

* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி "கமலா"" எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.

ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்) "மோட்ச ஏகாதசியில்"" உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.

Tuesday, 12 July 2016

திசை ஒத்த தெய்வம்

அந்தந்த திசைக்கேற்ற தெய்வங்கள் முறையாக வழிபாடு செய்வதன் மூலம் முழுபலனையும் பெற முடியும்.

சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.

வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.

சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.

ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட வேண்டும் என்பது பொது நியதி. இருப்பினும் நமது தெசாபுத்திக்கேற்ற தெய்வங்களையும், பாக்கியாதிபதிக்குரிய தெய்வங்களையும் தேர்ந்தெடுத்து வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

Thursday, 7 July 2016

ராசிஉடல் நலம்

எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்?

மேஷ:

தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே மிகையான நேரத்திற்கு வேலை செய்யும். அனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்கள் சுலபமாக கோபமும், எரிச்சலும் அடைவார்கள். அதனால் தலைவலி, பல் வலி, பற்களைக் கடித்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாமே மேஷ ராசிக்காரர்களுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடியதே.

ரிஷபம் :

தொண்டை, உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி மற்றும் கீழ் தாடையை கட்டுப்படுத்தும் சுக்கிரன் தான் ரிஷப ராசியை ஆளுகிறது. சுக்கிரன் வலுவாக இருந்தால், அழகிய, திடமான பற்கள் மற்றும் கூர்ந்து கேட்கக்கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்களுக்கு அடிக்கடி சளியும், காய்ச்சலும் பிடித்துக் கொள்ளும். சுக்கிரன் வலுவடைந்து இருந்தால், தீவிர தொண்டை தொற்றுக்கள், தைராய்டு, டான்சிலிடிஸ், தீவிர கழுத்து மற்றும் காது தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படுவார்கள. மேலும் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மிதுனம் :

இரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்தை ஆள்வது புதன் கிரகமாகும். இது உடலில் உள்ள மூட்டுக்கள் மற்றும் சுவாச அமைப்பை ஆளுகிறது. அதனால் பொதுவான சளிக்கு ஆளாவார்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுனம் வலுவிழந்து கிடந்தால் தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசைநாண் அழற்சியால் அவர்கள் சுகவீனம் அடைவார்கள்.

கடகம் :

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி, வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. அதிக உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிப் பொங்கும் வகையில் உள்ள கடக ராசிக்காரர்கள், செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். சந்திரனின் ஆளுமையால் தங்கள் கோபம் அல்லது வலியை அவர்களால் போக வைக்க முடியவில்லை என்றால், குடல் பிரச்சனைகள், வயிற்றில் அல்சர் மற்றும் செரிமானமின்மையால் அவர்கள் அவதிப்படுவார்கள்.

சிம்மம் :

சூரியனால் ஆளப்படும் சிம்மம், இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் ஆளும். அதனால் அவர்கள் அதிகார தன்மையுடன், வாழ்க்கையில் அதிக தன்னம்பிக்கையுடன் விளங்குவார்கள். இருப்பினும், வலுவிழந்த சிம்மம் என்றால் இதயம், ஊக்கமின்மை மற்றும் முதுகு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.

கன்னி :

என்ன உணவு உண்ண வேண்டும் என்பதையும், சுவை அரும்புகளை கட்டுப்படுத்தும் அனைத்து உறுப்புகளையும் ஆளும் கன்னி. அதனால் இயற்கையாகவே, அது வயிற்றையும், குடல்களையும் ஆளும். எதெற்கெடுத்தாலும் ஓடத்துடிக்கும் அவர்கள் பொதுவாக எல்லாவற்றிலும் அவசரமாக இருப்பார்கள். அவர்கள் மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான ஓய்வின்மையே இருக்கும். அதனால் உணவு அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தடையும்.

துலாம்  :

நல்லதொரு வாழ்க்கையை துலாம் ராசிக்காரர்கள் விரும்புவார்கள். தங்களைச் சுற்றி சந்தோஷம் நிறைந்த குதூகல சூழ்நிலை நிலவ வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். அழகான அனைத்தையும் அவர்கள் விரும்புவார்கள். சுக்கிர கிரகத்தால் ஆளப்படும் துலாம் ராசி, சிறுநீர்ப்பை செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை ஆளும். இன்பத்தால் செழித்தோங்கும் துலாம் ராசிக்காரர்கள் எதையுமே அளவுக்கு அதிகமாக செய்யாமல் இருப்பதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் துயரத்தில் ஆழ்த்தப்படுவார்கள். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். தங்களுக்கு சொந்தமானது என நினைப்பவற்றின் மீது அவர்கள் ஆட்டிப்படைக்கும் மற்றும் சொந்தம் கொண்டாடும் குணத்தை கொண்டிருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். சீரற்ற மாதவிடாய், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுக்கள் போன்றவைகள் இவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் ஆகும்.

தனுசு :

குருவால் ஆளப்படும் தனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர்களின் பார்வையை பாதிக்கும், முதுகெலும்பில் காயத்தை ஏற்படுத்தும், நச்சுத்தன்மை பிரச்சனைகளை உண்டாக்கும்.

மகரம் :

கடின உழைப்பாளியான மகர ராசி, எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும். பிடிவாதம் நிறைந்தவர்களான இவர்கள், கடினமாக உழைத்து தங்கள் லட்சியங்களை அடைபவர்கள். அதனால் அவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்கும்.

கும்பம் :

சந்தோஷமாக இருக்கும் கும்ப ராசி, மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும். நரம்புகளின் ஓட்டத்திற்கும், உந்துவிசைக்கும் அவர்கள் பொறுப்பாகும். சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு, தங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கவில்லை என்றால் இதய நோய்கள், கீல்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள்.

மீனம் :

அனிச்சைகளையும் நரம்பியல் அமைப்பையும் ஆளும். நடைமுறைக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போவதால், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இது அதிகமாகும் போது, அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, அவர்களுக்கு பல வியாதிகளை உண்டாக்கிவிடும்