Sunday, 17 July 2016

Horoscope prediction


[05:51, 7/17/2016] +91 93818 46104: Send your name, parent's name, date of birth with time and  place
For more details refer this site

www.agathiyarjanachithar.in

Your horoscope prediction will send to you via WhatsApp or you can call to us.
Per horoscope prediction u have to credit amount ₹ .1'000. To the bank given below
Choose a bank which is easier to you


Name : T.K.JANARTHANAN IYER
Bank name :
Indian Overseas Bank
Account No : 133901000027554
IFSC : IOBA0001339
Name :T.K.JANARTHANAN IYER
36, CMR road, madurai - 9.



NAME:T.K.JANARTHANAN IYER
BANK : HDFC BANK
ACCOUNT NUMBER: 50100006155555
IFSC: HDFC0001277
 MADURAI.
TAMIL NADU
INDIA
www.agathiyarjanachithar.in


Name : T.J.YOGESWARI
Bank name : icici bank
Account No : 601101505692
IFSC : ICIC0006011


Name : T.J.YOGESWARI
Bank name : State bank of India
Account number: 30412296928
IFSC : SBIN0000988

And u can also easily pay that via payment gateway

agathiyarjanachithar.in/ordernow.htm

Kindly inform us after the payment done

Thursday, 14 July 2016

கணநாதர் உபாசனா

கணநாதர் உபாசனா விதி

பிராதக்காலத்தி லெழுந்திருந்து ஸ்நானபானஞ் செய்து
பட்டு வஸ்திரம் அல்லது
நார்மடி அரையில்டுத்தி
விபூதி யணிந்து அனுஷ்டான முதலியதை முடித்து பரிசுத்தமான விடத்தில்
தன்னந்தனியனாய்
வீற்றிறுந்து யாதொரு
சிந்தனாவஸ்தையுமின்றி அடியிற் கூறியவாரு
தியானஞ்செய்து சக்ரமெழுதி பூஜையில்
வைத்து தூபதீபங் கொடுத்து மூல மந்திரத்தை  ஜெபிக்கவும்.



விக்னேஸ்வரர் மந்திரம்
ஓங் றீங் அங் உங் சிங்
கணதேவாய நம,சகல
துரிதபூத வாதைகளும் 
நசிமசி 11 நாள் உரு 
1008- ஜெபிக்கவும்
சித்தியாம்.
ஓரு வெற்றுலையில் 
அல்லது உன்ளங்கையில் விபூதி
பரப்பி  அதில் இச்சக்கரத்தை ஐங்கோணமாய்க் கீறி
அதிற் பீஜாசட்ரங்களை
வரைந்து அதைச் 
சுற்றிலும் ஓங்காரத்தைப் போட்டு
மூலமந்திரஞ் செபிக்க 
சகல காரியங்களுஞ் 
ஜெயமாம். பல நோய்களும் அகலும்.

பூஜை விவரம்
செம்பு அல்லது மண்
கலத்தில் சுத்தமான ஜலம் சுத்தியாய் மொண்டுவந்து அதில்
மாவிலைக்கொத்து
போட்டு கும்ப வஸ்திரங்கட்டி மஞ்சள் 
குங்குமம் அட்சதை புஷ்பஞ் சாத்தி அதன்முன் வாழையில் 
போட்டு அதில் தாம்பூல
பழம் தேங்காய் புஷ்பம் 
சந்தனம் பரமான்னம்
வைத்து சூடஞ் சாம்பிராணி முதலிய 
தூபதீபங்கொடுத்து 
செய்ய வேண்டியது.
கணபதி மூல மந்திரம்

ஓம் நமோ பகவதே
ஐயும் கிலியும் சவ்வும்
கணபதி வசி வசி சுவாகாவென்று உரு
1008-ஜெபிக்கவும்
சித்தியாம்.

இதன் பலன்
குழந்தைகளுக்கும
பெரியவர்களுக்கும்
சேர்ந்த பயம்,காத்து,
சோகம்,மந்தம்
முதலியவைகளால்
உணடாகும் சுரம் பல தோஷங்கள் 
சிரசிலுண்டாகும்
செவ்வாப்பு கட்டிகள்
தெற்கத்தி நோய்,இழுப்பு வலிப்பு
முதலியவைகளுக்கு
மேற்படி கணேசரைப்
பூஜை செய்து 108
உருவரையில் ஜெபித்து  கும்ப தீர்த்தம் மூன்று
தரம் கொஞ்சம் அருந்தக் கொடுத்து விபூதி பூசிக்கொண்டுவரவும்
சகல வினைகளும் பற்றந்து சௌக்கியப்படும்.

Wednesday, 13 July 2016

ஏகாதசி விரதபலன்கள்

ஏகாதசி விரதபலன்கள்
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என சிறப்புப் பெறுகின்றது. இந்த நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. சரியான முதலீடாக தேர்ந்தெடுத்தால் பயன்பல மடங்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தானே நாம். எனவே ஏகாதசி விரதத்தில் முதலீடுசெய்வோம்.

* மார்கழி தேய்பிறை ஏகாதசி "உற்பத்தி ஏகாதசி"" எனப்படும். பகையை வெல்ல உதவும்.

* தை மாத வளர்பிறை ஏகாதசி "புத்ரா"" எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும்.

* தை தேய்பிறை ஏகாதசி "ஸபலா"" எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும்.

* மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா"" எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.

* மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா"" எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.

மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா"" என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.

* பங்குனி தேய்பிறை ஏகாதசி "விஜயா"" எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.

* பங்குனி வளர்பிறை ஏகாதசி "ஆமலகீ"" எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும்.

* சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி "காமதா"" எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும்.

* சித்திரை தேய்பிறை ஏகாதசி "பாபமோசனிகா"" எனப்படும் பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர்.

* வைகாசி வளர்பிறை ஏகாதசி "மோஹினீ"" எனப்படும். உடல் சோர்வு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.

* வைகாசி தேய்பிறை ஏகாதசி "வரூதினீ"" எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

* ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "நிர்ஜனா"" என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும். எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம்.

* ஆனி மாத தேய்பிறை ஏகாதசி "அபரா"" எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும்.

* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி "தயினி"" எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும். ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

* ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "யோகினி"" என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.

* ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா"" என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்.

* ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "காமிகா"" எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது.

* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் "பத்மநாபா"" எனப்படும். இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.

* புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு "அஜா"" என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று பல்லாண்டுஅரசு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது).

* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "பாபாங்குசா"" எனப்படும் வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

* ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு "இந்திரா"" எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது.

* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு "ப்ரமோதினீ"" என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

* கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு "ரமா"" என்பர். இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது.

* வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி "கமலா"" எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும்.

ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும்,-(வைகுண்ட ஏகாதசியில்) "மோட்ச ஏகாதசியில்"" உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும்.

Tuesday, 12 July 2016

திசை ஒத்த தெய்வம்

அந்தந்த திசைக்கேற்ற தெய்வங்கள் முறையாக வழிபாடு செய்வதன் மூலம் முழுபலனையும் பெற முடியும்.

சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும்.

சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.

வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.

சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு தடைகளை அகற்றும்.

ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும், கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபட வேண்டும் என்பது பொது நியதி. இருப்பினும் நமது தெசாபுத்திக்கேற்ற தெய்வங்களையும், பாக்கியாதிபதிக்குரிய தெய்வங்களையும் தேர்ந்தெடுத்து வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

Thursday, 7 July 2016

ராசிஉடல் நலம்

எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்?

மேஷ:

தலை மற்றும் மூளை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும். மேஷ ராசியை கொண்டவரின் மூளை எப்போதுமே மிகையான நேரத்திற்கு வேலை செய்யும். அனைத்தையுமே மிகையாக சிந்திக்கும் இவர்கள் சுலபமாக கோபமும், எரிச்சலும் அடைவார்கள். அதனால் தலைவலி, பல் வலி, பற்களைக் கடித்தல் போன்ற பிரச்சனைகள் எல்லாமே மேஷ ராசிக்காரர்களுக்கு சாதாரணமாக ஏற்படக்கூடியதே.

ரிஷபம் :

தொண்டை, உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தி மற்றும் கீழ் தாடையை கட்டுப்படுத்தும் சுக்கிரன் தான் ரிஷப ராசியை ஆளுகிறது. சுக்கிரன் வலுவாக இருந்தால், அழகிய, திடமான பற்கள் மற்றும் கூர்ந்து கேட்கக்கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்களுக்கு அடிக்கடி சளியும், காய்ச்சலும் பிடித்துக் கொள்ளும். சுக்கிரன் வலுவடைந்து இருந்தால், தீவிர தொண்டை தொற்றுக்கள், தைராய்டு, டான்சிலிடிஸ், தீவிர கழுத்து மற்றும் காது தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதிப்படுவார்கள. மேலும் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

மிதுனம் :

இரட்டையர்கள் என அறியப்படும் மிதுனத்தை ஆள்வது புதன் கிரகமாகும். இது உடலில் உள்ள மூட்டுக்கள் மற்றும் சுவாச அமைப்பை ஆளுகிறது. அதனால் பொதுவான சளிக்கு ஆளாவார்கள் மிதுன ராசிக்காரர்கள். மிதுனம் வலுவிழந்து கிடந்தால் தீவிர காய்ச்சல், இருமல் மற்றும் தசைநாண் அழற்சியால் அவர்கள் சுகவீனம் அடைவார்கள்.

கடகம் :

சந்திரனால் ஆளப்படும் கடக ராசி, வயிறு மற்றும் செரிமான அமைப்புடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. அதிக உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சிப் பொங்கும் வகையில் உள்ள கடக ராசிக்காரர்கள், செரிமான அமைப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள். சந்திரனின் ஆளுமையால் தங்கள் கோபம் அல்லது வலியை அவர்களால் போக வைக்க முடியவில்லை என்றால், குடல் பிரச்சனைகள், வயிற்றில் அல்சர் மற்றும் செரிமானமின்மையால் அவர்கள் அவதிப்படுவார்கள்.

சிம்மம் :

சூரியனால் ஆளப்படும் சிம்மம், இதயத்தையும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தையும் ஆளும். அதனால் அவர்கள் அதிகார தன்மையுடன், வாழ்க்கையில் அதிக தன்னம்பிக்கையுடன் விளங்குவார்கள். இருப்பினும், வலுவிழந்த சிம்மம் என்றால் இதயம், ஊக்கமின்மை மற்றும் முதுகு பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள்.

கன்னி :

என்ன உணவு உண்ண வேண்டும் என்பதையும், சுவை அரும்புகளை கட்டுப்படுத்தும் அனைத்து உறுப்புகளையும் ஆளும் கன்னி. அதனால் இயற்கையாகவே, அது வயிற்றையும், குடல்களையும் ஆளும். எதெற்கெடுத்தாலும் ஓடத்துடிக்கும் அவர்கள் பொதுவாக எல்லாவற்றிலும் அவசரமாக இருப்பார்கள். அவர்கள் மனது அளவுக்கு அதிகமாக பகுப்பாய்வு செய்வதால், தொடர்ச்சியான ஓய்வின்மையே இருக்கும். அதனால் உணவு அலர்ஜி, அல்சர், மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்தடையும்.

துலாம்  :

நல்லதொரு வாழ்க்கையை துலாம் ராசிக்காரர்கள் விரும்புவார்கள். தங்களைச் சுற்றி சந்தோஷம் நிறைந்த குதூகல சூழ்நிலை நிலவ வேண்டும் என அவர்கள் விரும்புவார்கள். அழகான அனைத்தையும் அவர்கள் விரும்புவார்கள். சுக்கிர கிரகத்தால் ஆளப்படும் துலாம் ராசி, சிறுநீர்ப்பை செயல்பாடுகள் மற்றும் சிறுநீரகங்களை ஆளும். இன்பத்தால் செழித்தோங்கும் துலாம் ராசிக்காரர்கள் எதையுமே அளவுக்கு அதிகமாக செய்யாமல் இருப்பதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்கள் துயரத்தில் ஆழ்த்தப்படுவார்கள். அதனுடன் சேர்த்து சிறுநீரக செயலிழப்பு மற்றும் தீவிர சிறுநீர்ப்பை அழற்சிக்கு ஆளாவார்கள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்கள் பொறாமை குணம் கொண்டவர்கள். தங்களுக்கு சொந்தமானது என நினைப்பவற்றின் மீது அவர்கள் ஆட்டிப்படைக்கும் மற்றும் சொந்தம் கொண்டாடும் குணத்தை கொண்டிருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவும் மற்றும் எதிர்மறை சிந்தனையுடனும் இருப்பார்கள். இவர்களை ஆளும் ப்ளூட்டோ கிரகம், ஹார்மோன்கள் மற்றும் இனப்பெருக்க அமைப்பிற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். சீரற்ற மாதவிடாய், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்ப்பை தொற்றுக்கள் போன்றவைகள் இவர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் ஆகும்.

தனுசு :

குருவால் ஆளப்படும் தனுசு ராசிக்கார்கள் தங்களின் உயிர், கண் பார்வை, தொடை மற்றும் கல்லீரலின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான நம்பிக்கை அவர்களின் பார்வையை பாதிக்கும், முதுகெலும்பில் காயத்தை ஏற்படுத்தும், நச்சுத்தன்மை பிரச்சனைகளை உண்டாக்கும்.

மகரம் :

கடின உழைப்பாளியான மகர ராசி, எலும்புகள், குறிப்பாக உடலில் உள்ள மூட்டுக்களை ஆளும். பிடிவாதம் நிறைந்தவர்களான இவர்கள், கடினமாக உழைத்து தங்கள் லட்சியங்களை அடைபவர்கள். அதனால் அவர்களின் எலும்புகளும், மூட்டுக்களும் வலுவிழக்கும்.

கும்பம் :

சந்தோஷமாக இருக்கும் கும்ப ராசி, மூட்டுக்களின் அசைவையும் உடலையும் ஆளும். நரம்புகளின் ஓட்டத்திற்கும், உந்துவிசைக்கும் அவர்கள் பொறுப்பாகும். சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டு, தங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கவில்லை என்றால் இதய நோய்கள், கீல்வாதம், மூட்டுகளில் வீக்கம், ஆஸ்துமா, சுருள் சிரை நாளங்கள் மற்றும் அலர்ஜிகள் போன்றவைகளால் அவதிப்படுவார்கள்.

மீனம் :

அனிச்சைகளையும் நரம்பியல் அமைப்பையும் ஆளும். நடைமுறைக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போவதால், வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களினால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இது அதிகமாகும் போது, அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்க செய்து, அவர்களுக்கு பல வியாதிகளை உண்டாக்கிவிடும்