Thursday, 16 June 2016

திதி

அஷ்டமி நவமியில் எந்த காரியமும் துவங்க கூடாது என்று சொல்வது எதனால் ? இறைவன் படைப்பில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தானே.

சில நபர்கள் குழல் ஊதும் கண்ணன் வீட்டிற்க்கு ஆகாது ,
நடராஜர் உருவம் அல்லது சிலை குடும்பத்திற்கு ஆகாது ,
அமர்ந்த லக்ஷ்மி செல்வம் சேராது ,
இப்படி பல நம்பிக்கைகளை சொல்வது உண்டு ,

பொருளாதாரம் மற்றும் தேவைகள் தடை படகூடாது என்று அஞ்சி இந்த நம்பிகைகளை கடைபிடிகிறார்கள்.

அஷ்டமி என்பது ஒரு திதி .

திதி என்பது சூரியன்,சந்திரன்,பூமி இவர்களுக்குள் உண்டான இடைவெளி. விளக்கமாக புரிந்து கொள்ள
ஒரு மாதத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் மொழி கொண்டு  இருப்பதால்  நமக்கு சரிவர புரிவது இல்லை ,
 நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று புரிந்து கொள்ளல் வேண்டும் ..

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச்சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று .

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் ஐந்து   எனப்பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவது.

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறுவது .

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து .தச அவதாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் சொல்வது உண்டு .

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடுதஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும்.

இது தான் திதிகளை பிரித்து சொல்லும் முறை .

மனிதனின் ஆன்மாவுக்கும் விண்ணுலக நிகழ்வளுக்கும் தொடர்பு உண்டு இதை சித்தர்கள் அண்டமே பிண்டம் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று சொல்கிறார்கள் .

ஒரு ஒரு திதிக்கும் நம் ஆன்மா தொடர்ப்பு கொள்கிறது ,அமாவசை தர்ப்பணம் ,பௌர்ணமி தரிசனம் ,மற்றும் தான தர்ம செயல்கள் எல்லாம்  திதியுடன் சேரும்பொழுது தெய்வத்தை அடைகிறது .

தேய் பிறை புதன் கிழமை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார் .

இவரை வணங்கி தனக்கு அருளும் ,ஆசியும் வேண்டும் என்று ஆயுளை
அழிவில்லா பொருளை ,ஆன்ம சாந்தியை ,தரும்  சனி தேவர் பணிந்தார் .

சோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியம்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று சொல்கிறது ,
வியாழன் அன்று வரும் அஷ்டமி வளரும் பலனை (அட்சயம் )தரும் தன்மை உடையது என்றும் ,
வெள்ளியன்று வரும் அஷ்டமி குபேர தன்மைகளை தரும் என்றும் சோதிட நூல்கள் சொல்கிறது .

பொதுவாக அஷ்டமி என்றால் கம்சனை  வதம் செய்ய கிருஷ்ணன் பிறந்த தினம் என்றும் ,தாய் மாமனுக்கு ஆகாது என்றும் சிலர் சொல்வர் .

சுவடிகளில் அகத்தியர் சொல்வது 108 அஷ்டமிக்கு(வளர்பிறை /தேய்பிறை )  அம்மை அப்பனை  தரிசனம் செய்வதவர்களை சனியும் அஷ்டம விதியும் விலகி செல்லும் என்று சொல்கிறார் .

சனியின் சாபம் ,கோபம் உள்ளவருக்கு மட்டும் தான் அஷ்டமியில் சில விபத்துகள் நடக்கிறது ,
சிலருக்கு இரவு துக்கம் கெடுகிறது ,
சிலருக்கு காரிய தடைகள் வருகிறது என்று நான் கவனித்து பார்த்த பொழுது புரிந்தது .

இங்கே ஒரு கேள்வி அஷ்டமியில் என்ன காரியம் செய்யலாம் ?

 சோதிட நூல்கள் சொல்கிறது ...
அஷ்டமி அழிக்கும் தன்மை உடைய திதி அதனால் சண்டை துவங்க (போர்)காவல் துறைக்கு செல்ல ,
தீய செயல்களை தடுக்க ஹோமம் ,பூசைகள் செய்வது ,கடன் தொகையை அடைக்க மற்றும் தீய
செயல்கள் துவங்க அஷ்டமி திதி பயன்படும் ,
இதை மையமாக வைத்து சோதிடர்கள் நல்ல  காரியம்களை அஷ்டமியில் துவங்க வேண்டாம் என்பார்கள் .

நவமி திதி சுப திதி --சரஸ்வதி தேவி ஹயக்ரீவரை குருவாக ஏற்ற திதி ,

வெள்ளியுடன் சேரும் நவமியில் சரஸ்வதி மிகவும் பலம் கொண்டு விளங்குகிறாள் என்று நூல்கள் சொல்கிறது ...

அவசியமாக அஷ்டமியில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றாலும் ,பயணம் செல்லவேண்டும் என்றாலும்
விநாயகர்/துர்க்கை  பாதத்தில் ஒரு எலுமிச்சை பழம் வைத்து பூசை செய்து  அதை கைகளில் வைத்து கொண்டு செயலில் இறங்கலாம் .
செயல் முடிந்தவுடன் அதை ஓடும் நீரில் சேர்த்துவிடவேண்டும்.

1 comment:

  1. The best place to bet on cricket on cricket - Drm CD
    With 광명 출장안마 cricket in mind, the betting odds 구미 출장안마 of a given team is always important. Learn 충청북도 출장안마 more about 나주 출장샵 Cricket Odds and what makes it one of the best 수원 출장마사지

    ReplyDelete